Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி கல்வியில் தங்கியுள்ளது என்று நல்லிணக்கத்துக்கும் வலுவூட்டலுக்குமான நிலையத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அமீர் அலி வித்தியாலய மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக்கொப்பிகள் மற்றும் எழுதுகருவிகள் வழங்கும் நிகழ்வு, அவ்வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தமிழ், முஸ்லிம் மாணவர்கள் வறுமையை காரணம் காட்டி தங்களது கல்வியை ஒருபோதும் இடைநிறுத்தக்கூடாது.
கடந்த யுத்தம் காரணமாக தமிழர்களும் முஸ்லிம்களும் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்தனர். யுத்தத்தின் பின் தொடர் விளைவாக கல்வியும் சீரழிந்தது. யுத்தத்தின்போது, கல்வியை தொடர்வதில் அதிக இடர்பாடுகளை எதிர்கொண்டோம்.
ஆனால், யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் நாமெல்லோரும் வறுமையிலிருந்து விடுபட்டு பொருளாதார மேம்பாடு காணவேண்டுமாயின், அதற்கு ஒரே வழி கல்வியில் அக்கறை செலுத்தவேண்டும்.
தற்போதைய சமாதான சூழ்நிலையில் எத்தனையோ தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் பரோபகாரிகளும் நல்லுள்ளம் கொண்டவர்களும் தாராளமாக உதவக் காத்திருக்கின்றார்கள்.
வறுமை கல்விக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. இந்த விடயத்தில் பெற்றோரும் அவர் தம் பிள்ளைகளும் கல்வி பற்றி விழிப்படையவேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்கள் அனுபவித்துவந்த இன்னல்களிலிருந்து விடுபடுவதற்கு ஒரேவழி கல்வி முன்னேற்றமே. அதுவே நாட்டின் ஐக்கியத்துக்கும் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கும் வழிகோலும்' என்றார்.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ்.அப்துல் கபூர் உட்பட ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
45 minute ago