Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அக்ஷய திருதியை நாளில் நகை வாங்கி அணிவதால் என்றும் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாகவுள்ளது.
அக்ஷய திருதியையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள நகை விற்பனை நிலையங்கள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பின் பிரபல நகை விற்பனை நிலையமான சொர்ணம் நகை மாளிகையில் இன்று அக்ஷய திருதியையையொட்டி விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
சொர்ணம் குழுமத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை நகை கொள்வனவு செய்தவர்களுக்க விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதேபோன்று நகரில் உள்ள அனைத்து நகை விற்பனை நிலையங்களிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago
32 minute ago