2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டி குடும்பப் பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  ஈரளக்குளம் கிராம அலுவலர் பிரிவில்  செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை விஷப்பாம்பு தீண்டி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரளக்குளம் பெரியவட்டவான் பிரதேசத்தில் வசித்துவந்த 06 பிள்ளைகளின் தாயான  கணேசமூர்த்தி மங்களம் (வயது 50) என்பவரே உயிரிழந்தார்.

அதிகாலை மூன்று  மணியளவில்  வீட்டில் பாம்புக் கடிக்குள்ளான இந்தப் பெண், மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேற்படி  பெண் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X