2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'ஊழல் இடம்பெறாதிருக்க மக்களின் கண்காணிப்பும் அவசியம்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியில் ஊழல் மோசடிகள் இடம்பெறாதிருக்க வேண்டுமாயின், அந்தந்தப் பகுதிகளில் வாழ்கின்ற  மக்களின் பங்களிப்பும் கண்காணிப்பும் அவசியம் என்று ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஓடாவியார் 2ஆம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீட் இடும் வேலை இன்று  செவ்வாய்க்கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வில்  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'வழமைக்கு மாறாக இந்த வீதி ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் ஒப்பந்த அடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆயினும்,  அது ஒரு மக்கள் நிறுவனம் என்ற அடிப்படையில் இந்த உள்ளூர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பொதுமக்களின் உதவியை அவர்கள் நாடி நிற்கின்றார்கள்.

கிராம மட்டத்தில் அமுல்படுத்தப்படும் எந்தவொரு அபிவிருத்தியும் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் முழுமையான பங்களிப்பும் கண்காணிப்பும் இல்லாவிட்டால் தோல்வியிலேயே முடிவடையும்.

நீடித்து நிற்கும் அபிவிருத்திக்கு கிராம மக்கள் தமது முழு ஆதரவையும் பங்களிப்பையும் கண்காணிப்பையும் செலுத்தவேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொதுமுகாமையாளரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான எம்.எல்.அப்துல் லத்தீப், ஏறாவூர் நகர பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான வி.ஸவாஹிர், எல்.தீபாகரன் உட்பட கிராம சேவகர் ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

15 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீதி நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .