Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கரிசனையுடன் இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் நேற்று (20) தெரிவித்தார்.
தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய துறை மற்றும் கால்நடை வள அமச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலுக்கு மற்றும் ஈரளக்குளம் பிரதேசங்களுக்கு விஜமொன்றை மேற்கொண்டு, அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது எமது சமுகத்துக்கு தேவையான ஒரு விடயமாக கல்வி இருக்கின்றது. இதனை எமது சிறுவர்களுக்கு பெற்றோர் தான் அதிக அக்கறை எடுத்து வழங்க வேண்டும்.
மேலும், பெற்றோர் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு; உறுதுணையாக இருத்தல் வேண்டும். எப்பாடுபட்டாவது பிள்ளைகளுக்கான கல்விய பெற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறன கிராம புறங்களில் தான் மாணவர்களின் கல்வித் திறன் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் அவர்களுக்கான ஊக்குவிப்பு குறைவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலைகள் மாற வேண்டும். நாமும் அதற்கு உறுதுணையாக இருப்போம் என அவர் தெரிவித்தார்.
மேலும், முக்கிய விடயங்களான விவசாயம் காணிகள் இன்மை, விவசாய நடவடிக்கைகளுக்கு கிணறுகள் அமைத்தல், யானைகளின் தொல்லை மற்றும் வீடுகள் வழங்கப்படாமை, குளங்கள் புனரமைத்தல், கால்வாய்களை திருத்தியமைத்தல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
31 minute ago