Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்குள்ளானதாக கூறப்படும் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரச நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இம் மாதம் 8ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் படி இந்த சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரச நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளின் போது அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்கள் இது தொடர்பாக மேன்முறையீடு செய்ய முடியும்.
குறித்த மேன்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என அரச நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகளை, மேலதிக செயலாளர், அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு, சுதுந்திர சதுக்கம், டொறிங்டன் அவுனியு, கொழும்பு - 07 என்ற முகவரிக்கு எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago
44 minute ago