2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிசுவை கைவிட்டுச் சென்ற தாய்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பிலுள்ள வைத்தியசாலையொன்றில்  சிசு ஒன்றை பிரசவித்த தாய் ஒருவர் அச்சிசுவை கைவிட்டுச் சென்ற   சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர், இந்தத் தாய் குறை மாத சிசுவை பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில்,  இந்தச் சிசு  வைத்தியசாலையின் விசேட சிசுக்கள் சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், வைத்தியசாலையில் தாய் இருந்துவந்த நிலையிலேயே சிசுவை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X