Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகரில் சேருகின்ற திண்மக்கழிவுகளையும் சாக்கடைகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி முகாமைத்துவம் செய்வதற்கு இடவசதியின்மையால், மட்டக்களப்பு வாவிக் கரையோரத்தில் குப்பைகளை கொட்டும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஏறாவூர் நகரசபை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்று ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
ஏறாவூரை சூழ்ந்துள்ள மட்டக்களப்பு வாவிக் கரையோரத்தில் திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடத்தை நேற்று புதன்கிழமை (22) பார்வையிட்ட பின்னரே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
'ஏறாவூர் வாவிக் கரையோரத்தில்; ஒரு பக்கம் சாக்கடைகளை கொட்டுகின்ற அதேவேளை, அதனோடு இணைந்ததாக மறுபுறம் பாடசாலை, கலாசார மண்டபம், சமூகப் பராமரிப்பு நிலையம், வாவிக்கரையோரப் பூங்கா, விளையாட்டுத்திடல், மீனவர் விற்பனைக் கட்டடம், பிரதேச செயலகம், பள்ளிவாசல்கள் என்பன அமைந்துள்ளன.
ஏறாவூரில் அன்றாடம் சேருகின்ற திண்மக்கழிவுகளை வேறு வழியின்றி இந்த வாவிக் கரையோரத்தில்; கொட்ட வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு வெகு விரைவில் மாற்றுத்தீர்வு காணப்படாவிட்டால், இது மட்டக்களப்பு வாவியோடு மட்டும் நின்றுவிடாமல் ஒட்டுமொத்த இயற்கைச் சூழலையும் பாதிக்கும். இது ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சூழலுக்கே அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து இந்தப் பிரச்சினையை மனிதாபிமான நெருக்கடியாகக கருதி தீர்வை எட்ட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago
44 minute ago