Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, மீறாவேடை, கிண்ணயடி, மாஞ்சோலை, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களில் மிக நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரை வாழைச்சேனை பொலிஸார் இன்று (22) கைது செய்துள்ளனர்.
மேற்படி பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்ததையடுத்து, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேயின் ஆலோசனையின் கீழ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எல்.அமரசிங்க தலையில் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரனைகளின் அடிப்படையிலயே இக்கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து தொலைக்காட்சி, மடி கணினி, சிடி பிளேயர், அலைபேசிகள், தங்க நகைகள், சாஜர் டோச் லைட் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புபட்ட இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குழுவிலிருந்த இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றயவர் அவர்களின் நண்பர் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எல்.அமரசிங்க தெரிவித்தார்.
இக்கொள்ளை குழு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார்; மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
31 minute ago