Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,வா.கிருஸ்ணா
நாட்டிலுள்ள அனைத்து நெல் குற்றும் அரிசி ஆலைகளும் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாக கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என நெல் சந்தைப்படுத்தும் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தும் சபை சட்டத்தின் கீழ், இந்த நடிவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என நெல் சந்தைப்படுத்தும் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அரிசி ஆலைகள் அனைத்துக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் பதிவு செய்யப்படாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு தொடர்பான விண்ணப்பப்படிவங்களை நெல் சந்தைப்படுத்தும் சபை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தல் கூறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago