2025 ஜூலை 14, திங்கட்கிழமை

உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே செல்கின்றன: அருளானந்தம்

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கியே அனைத்து உதவிகளும் செல்கின்றது. ஆனால் வலியும் வேதனையும் சுமந்த மக்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளனர் என மட்டக்களப்பு வலய அதிபர் சங்கத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 05 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கையேடு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (22) காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
லண்டனைச் சேர்ந்த லெடர் மற்றும் ஆர்.பி.ரி.எஸ். உதவும் அமைப்புகளின் அனுசரணையில் இந்த பரீட்சை வழிகாட்டல் கையேடு வழங்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக 400 கையேடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அதிபர் சங்கத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம்,

தானங்களில் சிறந்த தானமாக கல்வித்தானம் உள்ளதாக பாரதியார் அழகாக கூறியுள்ளார். நாங்கள் செய்யும் புண்ணியங்களில் மிக முக்கியமானது ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதாகும்.

புலம்பெயர்ந்து சென்ற நிலையிலும் தமது உறவுகளுக்கு உதவ நினைத்து இங்குவந்து, இந்த உதவிகளை வழங்கியுள்ளதானது அவரின் பெருந்தன்மையை வெளிக்காட்டுக்கின்றது.

தமிழ் மக்கள், கடந்த கால யுத்தம் காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இருந்தபோதிலும் யுதத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியை நோக்கியே பார்வைகள் இருக்கின்றன. அந்த வலி,  நகர்ப்புறங்களில் இல்லையென்ற நிலையே உள்ளது.

இங்கு வாழ்பவர்களில் யுத்தப்பகுதிகளில் இருந்து உடமைகளை இழந்து உயர்களை பாதுகாப்பதற்காக இப்பகுதிக்கு வந்தவர்களே அதிகம். உறவுகளை இழந்த சிறுவர்கள் பலர் இன்று மட்டக்களப்பு நகரில் உள்ள இல்லங்களில் உள்ளனர். வலியையும் வேதனையும் சுமந்த மக்கள் இங்கும் வாழ்கின்றனர். புலம்பெயர் உறவுகள் உதவும்போது இப்பகுதியையும் நோக்கவேண்டும் என்றார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .