Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 03 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் விளையாட்டு புத்துணர்வு நிகழ்வு சனிக்கிழமை (02) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விளையாட்டில் ஆற்றல் உடைய இளைஞர் சேவைகள் மன்றம் சகல இளைஞர் கழகங்களையும் உள்ளடக்கும் விதத்தில் கிராமத்துக்கு விளையாட்டுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நாடு பூரான வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூர்;த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோபிந்தன் கருணாகரம் மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கழகங்களுக்கிடையே மென்பந்து போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாகரை ஏறாவூர் வாழைச்சேனை வாழைச்சேனை மத்தி ஓட்டமாவடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சகல இளைஞர் கழகங்களுக்கும் விளையாட்டுப் பொருட்கள் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago