2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நேபாள மக்களுக்கு வழங்குவதற்கு நிதி சேகரிப்பு

Gavitha   / 2015 மே 03 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

நேபாள நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக நிதி சேகரிக்கும் படலம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை புத்தளம் நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிதி சேகரிக்கும் படலத்தில், புத்தளம் பௌத்த மத்திய நிலையம், புத்தளம் கத்தோலிக்க ஆலயம், புத்தளம் இந்து ஆலயங்களும் இணைந்து கொண்டன.

ஒலி பெருக்கி சாதனங்கள் மூலமாக பொது மக்களுக்கு அறிவிப்புகளை விடுத்து தொண்டர் அமைப்புகளின் பிரநிதிகள், மதஸ்தலங்களின் நிர்வாகிகள் இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

புத்தளம் பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட செயலாளர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த நிதி உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாக செயலாளர் ஜே.இசட்.எம். நாஸிக் தெரிவித்தார்.

மேற்படி நிதி வசூலிப்பின் போது, பொது மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு நிதி உதவிகளை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .