2025 ஜூலை 09, புதன்கிழமை

மட்.சிறைச்சாலையில் வெசாக் தான நிகழ்வு

Princiya Dixci   / 2015 மே 04 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அன்பையும் கருணையையும் பௌத்த மதம் போதிக்கின்றது என மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எச்.வி.எஸ்.பிரியங்கர, ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் கைதிகள் நலன்புரிச்சங்கம் ஆகியன இணைந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த வெசாக் தான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

பௌத்த மதத்தின் தர்ம போதனைகள் அடங்கிய பதாதைகள்  முதன் முதலாக பாலி மொழி உட்பட நான்கு மொழியிலும் இங்கு நாம் தொங்கவிட்டுள்ளோம். மட்டக்களப்பு சிறைச்சாலையின் வரலாற்றில் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.மோகன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையினால் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .