2025 ஜூலை 09, புதன்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Thipaan   / 2015 மே 05 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் மக்கள்; இன்று (05) காலை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது காணிகளை அயல் கிராமங்களில் உள்ள சில முஸ்லிகள் சட்டவிரோதமாக கைப்பற்றி வருவதாகவும் அதற்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு  குடியிருப்புக் காணிக்குரிய காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் அதில் தங்களை குடியேறி இருப்பதற்கு அயல் கிராமமான மீறாவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் தடையாக இருப்பதாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வாழைச்சேனை- மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக கூடி  எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

குறித்த காணிப்பிரச்சினை தொடர்பாக மாவட்டச் செயலாளருக்கு தெரியப்படுத்துவதுடன் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்வதாகவும் இன்றில் இருந்து அத்துமீறி காணிகளை சட்ட விரோதமாக பராமரிக்க வருபவர்களுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று வாழைச்சேனை பொலிஸார் உறுதியளித்தனர்.

இதனையடுத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் 11.30 மணியளவில் கலைந்து சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .