2025 மே 15, வியாழக்கிழமை

பெண்கள் புறக்கணிப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 15 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களை வேட்பாளர்களாக போடாததால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் கவலையை தெரிவிப்பதுடன் வேதனையடைகின்றனர் என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (15) கருத்து தெரிவிக்கும் போதே சல்மா ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.

இந்;த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண்ணைக் கூட நிறுத்தவில்லை. இதன் மூலம் இவர்கள் பெண்களை புறந்தள்ளி ஒதுக்கியுள்ளனர்.

பெண்களுக்கான சமவுரிமை பெண் சுதந்திரம் பற்றி பேசும் அரசியல் வாதிகள் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை இல்லாமல் செய்துள்ளதுடன் பெண்கள் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பினையும் இல்லாமலாக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .