Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
எதிர்காலத்தில் கல்குடாத் தொகுதிக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அத்தொகுதி மக்கள் உறுதியாக இருப்பார்களாயின், கல்குடாத்தொகுதிக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராமங்களின் அபிவிருத்திக் குழுக்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் எமது பிரதேசத்துக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோமாயின், கல்குடாத்தொகுதியை பற்றியும் எமது இருப்பைப் பற்றியும் நாடாளுமன்றத்தில்; பேசுவதற்கு யாருமே இல்லாது போய்விடும். அவ்வாறானதொரு நிலை ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே எமது பிரதேசத்துக்கான பிரதிநிதித்துவம் பெறப்படவேண்டும்' என்றார்.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago