Princiya Dixci / 2015 ஜூலை 17 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட ஆற்றங்கரையோரப் பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மர்ஹூம் செயினுல் ஆப்தீன் வாவிக்கரைப் பூங்கா, நேற்று வியாழக்கிழமை (16) மாலை 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
முதலமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் ஏ.நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக உள்ளக போக்குவரத்து முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோருடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உதவிச் செயலாளர் முஹம்மட் ராபி உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், மட்டக்கப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
15 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பூங்கா 'மர்ஹூம். செயினுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பூங்கா' என்று பெயர் சூட்டபட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago