2025 மே 15, வியாழக்கிழமை

மு.கா. - ந.தே.மு. புரிந்துணர்வு உடன்படிக்கை

Princiya Dixci   / 2015 ஜூலை 26 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை, நேற்று சனிக்கிழமை (25) கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹம்மத்தும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டனர்.

இதில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .