Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 27 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.ஏ.எச்.ஏ.ஹுஸைன்
முஸ்லிம் காங்கிரஸூடனான கூட்டு இணைவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது அடிப்படைக் கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புகளையும் நாம் செய்யவில்லை' என்றார்.
'இந்நாட்டில் நல்லாட்சி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 10 வருடங்களாக அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கொள்கையில் உறுதியாகவிருந்து அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டியது.
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையினக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு முரண்பாடான கொள்கைகளை கொண்ட கட்சிகளுடனும் கூட்டு உடன்படிக்கைகள் மூலம் இணைந்து நல்லாட்சிக்கான உழைப்பை முன்னின்று செய்தது. இதனால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மீது சக்திவாய்ந்த அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
'எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலாக பல கட்சிகள் இணைந்து நல்லாட்சிக்கான உழைப்பை மேற்கொள்கின்றன. அதில் ஓரங்கமாகவே முஸ்லிம் காங்கிரஸுடனான எமது கூட்டணியும் அமைந்துள்ளது.
நாங்கள் இவ்வாறான கூட்டணிகள் ஏதுமின்றி தனியாக அரசியலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பல வருடங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் நல்லாட்சிக் கொள்கைகள் பற்றி தெளிவாக முன்வைத்திருந்தோம்.
கூட்டணிகளும் ஒப்பந்தங்களும் அணி சேர்வுகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால், அந்த ஒவ்வொரு கூட்டணிகளும் ஒப்பந்தங்களும் அணி சேர்வுகளும் எமது இலட்சியத்தை நோக்கி எம்மை நகர்த்துவதாக இருக்கவேண்டும். எமது அடிப்படைக் கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாது சமூக நலன் அடிப்படையிலான இந்தக் கூட்டணியை ஒரு பொது இலட்சியத்துக்காக நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
இங்கு முஸ்லிம் காங்கிரஸில் நாம் இணையவில்லை. எங்களுடைய கட்சியில் அவர்கள் இணையவுமில்லை. இரண்டு கட்சிகளும் தனித்துவமான அடையாளங்களை கொண்டவையாகும். இரண்டும் பொது நோக்கில் இணைந்துள்ளன. நாம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் இது தெளிவாக பிரதிபலிக்கிறது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago