2025 மே 14, புதன்கிழமை

ஆசனம் கிடைக்கவில்லையென்று ஹிஸ்புல்லாஹ் வெளியேறினார்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்று கூறி முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு வாக்குகள் எண்ணும்  நிலையத்திலிருந்து  செவ்வாய்க்கிழமை காலை வெளியேறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வி அடைய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆசனம் கிடைத்துள்ளது.

இதை அடுத்து இங்கு வாக்குச்சீட்டுக்கள் கட்டப்பட்டுள்ளதை  ஒருமுறை  பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வாக்குகள் எண்ணும் உத்தியோகஸ்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாக்குச்சீட்டுக்களை பரிசீலனை செய்யுமாறு பணித்தார்.

வாக்குச்சீட்டுக்கள் பரிசீலிக்கப்பட்டன. பின்னர் வெளியில் வந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்று கூறி வாக்குகள் எண்ணும் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இதன்போது, அவருடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அந்தக்கட்சியின் வேட்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் இ.சாணாக்கியன் ஆகியோரும் அவரின் ஆதரவாளர்களும் வெளியேறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .