Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்
நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலின்போது, சமாதானத்தையும் சந்தோஷமான வாழ்க்கையையும் விரும்பிய மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெற்றுமுடிந்துள்ள இந்தத் தேர்தல் நல்ல செய்தியை நாட்டுக்கும் உலகத்துக்கும் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் நல்லதொரு ஆட்சி நடைபெறவேண்டும். அமைதியான சூழலும் அதற்கேற்ப வாழ்வாதார நடைமுறையும் இந்தப் புதிய அரசாங்கம் குறைவின்றி வழங்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்' என்றார்.
'எனவே, மக்களுக்கான சிறந்த ஆட்சியை புதிய அரசாங்கம் செய்யுமென்பதில் சந்தேகம் இல்லை. ஆட்சியின் பங்காளர்களாக இணைந்து கை கொடுத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் மக்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சியை மாற்றி அமைக்க தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளுதலும் கட்டாயத் தேவையாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago