2025 மே 14, புதன்கிழமை

வாக்களித்தவர்களுக்கு நன்றி

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேர்தல் களத்தில் நின்ற எனக்கு வாக்களித்து தமிழ்த் தேசியத்திற்கு உரமூட்டிய அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாடாளுமன்றத் தெரிவில் நான் தவறவிடப்பட்டமை எனது தமிழ்த் தேசிய உணர்விலோ அதற்கான செயற்பாட்டிலோ எந்தவித தளர்வையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அதை வலுப்படுத்தியுள்ளது.

எமது மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் சிறந்த சந்தர்ப்பம் இம்முறை இருந்தது. இது தொடர்பாக எம்மால் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், இந்த அரிய வாய்ப்பு நழுவவிடப்பட்டமை பெருமைக்குரிய விடயம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .