Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
“கிழக்கு மாகாண சபை, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. திருத்தத்துடன் கூடிய 20ஆவது திருத்தத்தின் திருத்தத்துக்கே, விருப்பம் தெரிவித்துள்ளது” என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரனம் மற்றும் சிப்லி பாறூக் ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நேற்று மாலை ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தத்துக்கு தாம் ஆதரவு தெரிவித்து, அதனை நிறைவேற்றியுள்ளதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“நாம் ஒரு போதும் 20ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த 20ஆவது திருத்தம், கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட்ட போது, அதை நாம் திருப்பியனுப்பினோம். அதற்கு ஒரு போதும் நாம் ஆதரவளிக்கவில்லை.
“இந்த 20ஆவது திருத்தத்தில் சில திருத்தங்களை முன்வைத்து அதற்கான முன்மொழிவுகளை நாம் அனுப்பி வைத்தோம்.
“அதில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளை கலைக்கின்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்பன போன்ற விடயங்களை நாம் எதிர்த்தோம்.
“இந்த நிலையில் பிரதமர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட சிலர் ஒன்று கூடி ஆராய்ந்து, அந்த 20ஆவது திருத்தத்தில் சில மாற்றங்களை செய்து, அதில் மாகாண சபைகளை கலைக்கின்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ள விடயங்கள் போன்ற சில விடயங்களை நீக்கி புதிய திருத்தத்தை, சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாண சபையால் 20ஆவது திருத்தத்தின் திருத்தத்துக்கு எமது சாதகமான விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம்” என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
9 hours ago