Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏறாவூர், காத்தான்குடி நகரங்களில் நடத்தப்பட்ட படுகொலைகளின் 27ஆவது ஆண்டு நினைவையிட்டு, பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளனவென, இவ்விரு பிரதேசங்களினதும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனங்கள் அறிவித்துள்ளன.
இதனடிப்படையில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நலன் விரும்பிகள், ஊர்ப்பிரமுகர்கள், மார்க்கத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன், காத்தான்குடியில் நாளை 3ஆம் திகதியும் ஏறாவூரில் எதிர்வரும் 12 ஆம் திகதியும், குர்ஆன் ஓதல், நினைவுச் சொற்பொழிவுகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
ஏறாவூரில் ஏறாவூர் நகரப்பகுதி, சுரட்டையன்குடா, புன்னைக்குடாவீதி, ஐயன்கேணி, சத்தாம் ஹுஸைன் கிராமம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குல்களில், சுமார் 121 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 200 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
காத்தான்குடி மீரா பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாசல்களில், 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை, இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள், துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .