2026 மே 14, வியாழக்கிழமை

dd

2,789,000 ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்

Super User   / 2013 ஜூலை 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 2,789,000 ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,789,000 ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகளும் அத்துடன் பதிவு செய்யப்படாத மீன்பிடி தோனிகளும் கைப்பற்றப்பட்டன.

மாவட்டத்தின் வாகரை, வாழைச்சேனை, காத்தான்குடி, மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, நாவலடி, களுவாஞ்சிகுடி போன்ற மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடற்றொழில் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்து பாவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்கொண்டுள்ளோம்" என்றார்.

இதேவேளை, மூன்று அங்குலத்திற்கும் குறைவான முக்கூட்டு வலைகள் கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதியின்றி மீனவர்கள் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .