2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

304 விளையாடிய 30 பேரும் விடுவிப்பு

Editorial   / 2024 மார்ச் 26 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம். எஸ். எம். நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் 

சட்டவிரோதமாக ஒன்று கூடினார்கள் என்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேரின்  வழக்கு    மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (26) தள்ளுபடி செய்ததுடன் 30 பேரும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.

பாலமுனையில் வளகு ஒன்றில், மார்ச் 1ஆம் திகதி  ஒன்று கூடி  பொழுதுபோக்குக்காக 304 விளையாடிக் கொண்டிருந்த போது சட்டவிரோதமாக  ஒன்று கூடினார்கள் எனும் குற்றச்சாட்டில்  சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர்  கைது செய்யப்பட்டனர்

 விசாரணைகளை மேற்கொண்ட காத்தான்குடி  பொலிஸார் இவர்களை  இம்மாதம் முதலாம் திகதி   மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படுத்தினர். அப்போது ஒரு இலட்சம் ரூபாய்  சரீரப்பினையில்  இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவா நீதிமன்றத்தில். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஹம்சா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை  (26)  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே நீதவான் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வழக்கில் இருந்தும் 30 பேரையும் விடுவித்து, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்த வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஆர் எம்.நிப்றாஸ் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X