2026 மே 06, புதன்கிழமை

345 கமநெகும அபிவிருத்தி திட்டங்களுக்கு மட்டு. மாவட்ட அபிவிருத்திக்குழு அங்கீகாரம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள 345 கமநெகும அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு அங்கீகாரம் வழங்கியது.

மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அபிவிருத்திக்குழு பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,மீள்குடியேற்ற
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மாகாண, பிரதேச, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்கள், படை, பொலிஸ் அதிகாரிகள் பிரதேச
செயலாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போத இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள 345 கமநெகும அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு அங்கீகாரம் வழங்கியது. அத்துடன் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்டத்தில் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .