2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

4 பேர்ச்சஸ் காணியிலும் கட்டிடங்கள் அமைக்கலாம் : மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யதாஜித்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டுமென இதுவரை இருந்த ஏற்பாட்டினைத் திருத்தி, 4 பேர்ச்சர் காணியிலும் கட்டடங்கள் அமைக்கலாமென, மாநகரசபையால் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.

கடந்த சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று (11) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு நகருக்குள் இடப்பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதால், தம்மிடமுள்ள காணிகளின் விஸ்தீரணத்துக்குள் கட்டடங்களை அமைக்க முடியாமலுள்ளதாகப் பொதுமக்கள் சிலர் தன்னிடமும், மாநகரசபைக்கும் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க, கடந்த 9ஆவது மாநகரசபை அமர்வின் போது, தன்னால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த இந்தத் தீர்மானத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதும் மாநகர எல்லைக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .