2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

40 வருடங்களுக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட பயணம்

Janu   / 2025 ஜனவரி 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அல்லல்பட்ட மக்களுக்கான புதிய பஸ் சேவையை கிறீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் பேரில், கஷ்டப் பிரதேசமான மாவலையாறு கிராமத்துக்கு செங்கலடி ஊடாக குறித்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் முகாமையாளர் எம்.எம் ஷைனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் ஆர். எம் விஜித தர்மசேன உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் 

செங்கலடியில் இருந்து காலையில் புறப்படும் பஸ் சேவை மாவலையாறு, மாவடிச்சேனை, சிவத்த பாலம் உட் பட பல கிராமங்கள் கூடாக சுமார் 28 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது .

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X