2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

5ஆம் கட்ட திவிநெகும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் 5ஆம் கட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இதன் பிரதான நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேத்தாழைக் கிராமத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது மர நடுகை மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,  பயனாளிகளுக்கான பயிர் விதைகள்,  மரக்கன்றுகள் என்பவையும்; வழங்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணி;ப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .