2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

568 பாடசாலைகள் திறந்தன; பொலிஸாரும் கண்காணித்தனர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா, வ.சக்தி, ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன்  கியாஸ், எம்.எஸ்.எம்.நூர்தீன் 

கொரோனா நீண்ட விடுமுறையின் பின்பு கிழக்கு மாகாணத்தில், 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப வகுப்புக்களைக் கொண்ட 568 பாடசாலைகள் இன்று (21) மீளத் திறக்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு வருகைதந்திருந்தனர்.

கல்வி அதிகாரிகள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், வரவு அறிக்கைகளுடன் கண்காணித்து பட்டியலையும் அறிக்கைசெய்தனர். மாணவர், அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வரவு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட்டது.

அதேவேளை, பொலிஸாரும் சகல பாடசாலைகளுக்கும் சென்று காலை முதலே கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், வரவு அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டனர்.

கிழக்கிலுள்ள 13 வலயங்களிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டன என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 36 பாடசாலைகள் திறக்கப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகளும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 31 பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X