2025 மே 06, செவ்வாய்க்கிழமை

60 வயதைத் தாண்டியவர்களின் தொகை மேலும் உயரும்: உளநலப் பிரிவுப் பொறுப்பாளர்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

இலங்கையின் சனத்தொகையில் தற்போது 60 வயதைத் தாண்டிய வயோதிபர்கள் 12 சதவீதமாகும்.  இது 2050ஆம் ஆண்டளவில் 30 சதவீதமாக உயர்வடையும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அலுவலக உளநலப் பிரிவுப் பொறுப்பாளர் வைத்திய கலாநிதி பி.யூ.டி.ரமேஸ் தெரிவித்தார்.

உலக சனத்தொகையில் 2013ஆம் ஆண்டில் 60 வயதைத் தாண்டிய வயோதிபர்கள் 800 மில்லியன் பேர் உள்ளனர். இத்தொகை 2050ஆம் ஆண்டளவில் 2 பில்லியனாக உயர்வடையும் எனவும் அவர் கூறினார்.

உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித வளனார் முதியோர் இல்லத்தில் 'முதுமையில் உளநலம்;' எனும் தலைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பபட்ட நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இன்றைய இளைஞர்கள், முதியவர்களின் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம். முதியவர்களைக் கனம் பண்ணி அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதன் மூலம் நாம் இளையவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்வோம் எனத் தெரிவித்தார்.

கல்லடி, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி வயோதிபர் இல்லங்களிலுள்ள 150 வயோதிபர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கான பரிசுகளை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கொழும்பு வேல்ட்விஷன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ பிரதிநிதிகள், எகெட் நிறுவன இயக்குநர் அருட்சகோதரர் கிறைட்டன் அவுட்ஸ்கோன்,  வண்ணாத்தி பூச்சி சிறுவர் பூங்கா ஸ்தாபகர் அருட்சகோதரர் போல் சற்குணநாயகம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தாண்டவன்வெளி புனித வளனார் முதியோர் மற்றும் வண்ணாத்தி பூச்சி சிறுவர் பூங்கா வளவாளர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X