2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

93 பேருக்கு கண்களில் வெள்ளை படர்தல் நோய்

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


அனாம்


மட்டக்களப்பு, மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் புதன்கிழமை (19) இடம்பெற்ற இலவச கண் சத்திர சிகிச்சை முகாமில் 93 பேருக்;கு கண்களில் வெள்ளைப்படர்தல் நோய் காணப்படுவதாகவும்  இவர்களுக்கான சத்திரசிகிச்சைக்குறிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம் அறபாத் ஸஹ்வி தெரிவித்தார்.

கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்காக முற்றிலும் இலவசமாக சத்திர சிகிச்சைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேற்படி இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.  

இவர்களுக்கான பரிசோதனைகளை பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த வைத்திய நிபுணர்கள் செய்தனர்.

இனங்காணப்பட்ட கண் நோயளர்களுக்கு இரு வாரங்களுக்குள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகள் இடம் பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜம்இய்யதுஷ்ஷபாபின் அனுசரணையில் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம் முகாமில்  முந்நூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X