2026 மே 06, புதன்கிழமை

95 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் வர்த்தக நடவடிக்கையின்;போது மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  95 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் கடந்த 3 நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில்;; திடீர் சோதனையை மேற்கொண்டது. 

இதன்போதே மேற்படி 95 வர்த்தகர்களும் அகப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, கிரான், மட்டக்களப்பு நகரம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சோதனையின்போது மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்ட துணி அளக்கும் கருவிகள், குறைவான நிறுவையுள்ள தராசுகள், முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வர்த்தக நடவடிக்கையின்;போது மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  95 வர்த்தகர்களும் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .