Princiya Dixci / 2021 மார்ச் 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
உலகத்தையே தன்பால் ஈர்த்த “சுனாமி பேபி” எனப்படும் சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ், இன்று (01) க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ், செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் மிகவும் உற்சாகத்துடன் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றினார்.
தனது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கோவில் வழிபாட்டை பூர்த்திசெய்து தான் பரீட்சைக்கு தோற்றுவதாக அவர் தெரிவித்தார்.
சுனாமி அனர்த்ததின்போது கண்டெடுக்கப்பட்ட அபிலாஸ், தனது குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக நடைபெற்ற பரீட்சையில் சித்திபெற்றதைப் போன்று, இப்பரீட்சையிலும் அவர் களமிறங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago