Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் திண்மக்கழிவுகள் அகற்றப்படாததால் மட்டக்களப்பு மாநகர சபை பகுதியில் பல இடங்களிலும் குப்பைகள் தேங்கிக் காணப்படுவதாக, பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் உட்படப் பல வீடுகளில் திண்மக்கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன் இவைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு நகர் பகுதிகளிலுள்ள வீதிகளிலும் குப்பைகள் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் திண்மக்கழிவுகள், குப்பைகள், மனிதக்கழிவுகள் கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, திருப்பெருந்துறையிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட, தீ சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு, திருப்பெருந்துறை கிராம மக்கள், இப்பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடுதலாக இருப்பதாகத் தெரிவித்து, திண்மக்கழிவுகள் இங்கு கொட்டப்படக் கூடாது எனவும் இதனை மூட வேண்டுமெனவும் கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்தப் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக திண்மக்கழிவுகள் அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
9 hours ago