2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அச்சத்தில் விவசாயிகள்

Mithuna   / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி      

மட்டக்களப்பு - போரதீவுப் பற்று பிரதேசத்தில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், புதன்கிழமை (07)  காலை காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,  குறித்த பிரதேசத்தில் உள்ள வாவியை அண்மித்துள்ள  பற்றைக் காட்டுப் பகுதியில் இக்காட்டு யானைகள் தங்கியுள்ளதால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில்  கருத்து  தெரிவித்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய  அதிகாரிகள்,  "கிராமங்களை அண்மித்து  காட்டு யானைக் கூட்டம் நிற்பதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது. யானைகளைப் பகல் வேளையில் அப்புறப்படுத்த முடியாது, அதனை இரவு வேளையிலேயே வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X