2025 மே 12, திங்கட்கிழமை

அதிக எலிகளை வேட்டையாடும் எலிப்பொறி தயாரித்து மாணவி சாதனை

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய கருவியொன்றைத் தயாரித்து, மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி, சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஜூட் தவசீலன் என்சலேற்றா எனும் மாணவியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015ஆம் ஆண்டின் புத்தாக்கப் போட்டியில் இம்மாணவி 2ஆம் நிலையினைப் பெற்றுள்ளார்.

தரம் 9,ல் கல்வி கற்கும் இம்மாணவி, வலயமட்டத்தில் முதலிடத்தினை பெற்று, தேசிய மட்டத்துக்கு தெரிவாகி, 2015 டிசம்பர் மாதம் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X