2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உபகரணங்கள் ஒப்படைக்கப்படமாட்டது

Administrator   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

வடகடல் எல்லைப் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் மீன்பிடி உபகரணங்கள், மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான்குளம் தர்மபுரத்தில் நடைபெற்ற உவர் நீர் மீன் உற்பத்தி நிலைய நிர்மாணப்பணியை ஞாயிற்றுக்கிழமை (07)ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

'இந்திய மீனவர்களினால் வடமாகாண மீனவர்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சனிக்கிழமை இலங்கை வந்த இந்திய தூதுக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளோம்.

இந்திய மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அத்துமீறிய மீன்பிடியை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், அத்துமீறிய மீன்பிடியை தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X