Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 14 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். எம். நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் திங்கட்கிழமை (13) இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு அறிக்கையிட நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு செய்தி அறிக்கையிடல் தொடர்பான வழிகாட்டல் மாவட்ட ஊடகப்பிரிவு வளவாளர்களால் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
32 minute ago