2025 மே 23, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நூறு மில்லியன் ரூபாய் செலவில் இன்று (12) பல்வேறு அபிவிருத்திப் பணிகளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூகின் முயற்சியால், இந்த அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, காத்தான்குடி முதலாம் குறிச்சி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன், வீதிகள் மற்றும் வீதிகளுக்கான வடிகான்கள், கட்டிடங்களுக்கான அடிக்கல் நடல் மற்றும் முடிவடைந்த அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.ஸபி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும், எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடைந்து மக்களிடம் கையளிக்கப்படுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X