2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அனுமதியேன்’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

“எனது தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அணுகப்படும் எந்த விடயத்தையும் இந்த சபையில் தீர்மானமாகக் கொண்டுவர நான் அனுமதியேன்” என ஏறாவூர் நகர சபையின் புதிய தலைவர் எம்.எஸ். நழீம் சூளுரைத்தார்.

புதிய தலைவரின் கீழ், ஏறாவூர் நகர சபையின் 35ஆவது மாதாந்த சபை அமர்வு, நகர சபை மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.

இதன்போது, அச்சபையின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 16 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

ஆரம்பத்தில் வாதப் பிரதிவாதங்களுக்குப்  பின்னர் சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டு, சபை அரை மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சபையின் கடந்த 34ஆவது அமர்வில் பிரதித் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஏறாவூர் நகர சபையில் இயங்கி வரும் விவசாய விரிவாக்கல் அலுவலகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டுமென, ஏறாவூர் சபையின் முன்னாள் தலைவர் ஐ. அப்துல்வாஸித் வாதிட்டார். இதன்போதே, சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

எனினும், அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்படுவதாக சபை மேயர் நழீம் அறிவித்ததும் சபை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்றன.

தொடர்ந்து உரையாற்றிய புதிய நகரச பைத் தலைவர் நழீம், “இந்தச் சபையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, மக்கள் நலன் கருதி மாத்திரம் செயலாற்ற வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

“அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, சமர்ப்பிக்கப்படும் எந்த விடயத்தையும் இந்தச் சபையில் தீர்மானமாகக் கொண்டு வர நான் ஒரு போதும் அனுமதியேன்.

“மக்கள் நலன் கருதி மாத்திரம் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். நாம் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளால் ஏனைய அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள உறுப்பினர்களோ, உத்தியோகத்தர்களோ  அல்லது மக்களோ பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதேபோன்று, ஏனைய உறுப்பினர்களும் இருந்து கொண்டால் இந்த நகர சபைப் பிரதேசத்தை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .