Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜனவரி 07 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும்போகச் செய்கைக்கான அறுவடை நடைபெறும் இக்காலகட்டத்தில், உள்ளூர் உற்பத்தியார்களைப் பாதிக்கும் வகையில், அரசாங்கம் அரசியை இறக்குமதி செய்துள்ளது. இதனால், நுகர்வோர் நன்மையடைந்தாலும், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர்' என, விவசாய அமைப்புத் தலைவர் வ.கந்தசாமி தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில், செங்கலடி மத்தியக் கல்லூரி மண்டபத்தில், இன்று (07) நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள், பெரும்போகச் செய்கை வேளாண்மையை அறுவடை செய்ய உள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தும் சபையானது, நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வராத காரணத்தினால், 1800 – 2000 ரூபாய் வரை, வியாபாரிகள் கொள்வனவுக்காக கேட்கின்றனர்.
'விவசாயத்தைப் பொறுத்தவரை, ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. பெரும்போகத்தின் போது, 20 முதல் 25 மூடை விளைச்சலே கிடைகிறது சில பகுதிகளில் அதைவிட அதிகம் விளையலாம். இந்த நெல்லை தற்போது வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்றால், எங்களுடைய உற்பத்திச் செலவைக்கூடப் பெறமுடியாத நிலை ஏற்படும்.
'மட்டக்களப்பு விவசாயிகள், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனுடன் இறக்கும் நிலையில் உள்ளார்கள். இதனைத் தவிர்ப்பதற்கு, அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை, நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில், ஜனவரி 22ஆம் திகதியன்று, மாவட்டத்தில் உள்ள 8 அரச நெல் கொள்வனவு நிலையங்களிலும் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்வதாக, அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கூறியுள்ளார்.
'நெல்லை அரசாங்கம் உத்தரவாத விலைக்குக் கொள்வனவு செய்தால், வெளியாரின் தலையீடு இருக்காது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago