Princiya Dixci / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் இன்று (19) தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
இதன்படி, எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் பொது விடுமுறை தினமான இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபைக்கு முன்னாலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .