2025 மே 22, வியாழக்கிழமை

அரையாண்டு பரிசோதனைகள் ஆரம்பம்

Editorial   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில், இவ்வாண்டின் அரையாண்டுக்கான பொலிஸ் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ்,  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2017ஆம் ஆண்டின் கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை, இன்று காலை  மஞ்சந்தொடுவாய் ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. சமன் யட்டவர ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆளுமை, தோற்றம், ஆரோக்கியம் என்பன மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசோதிக்கப்பட்டது.

இங்கு பொலிஸ் பரிசோதனை மேற்படி விளையாட்டு மைதானத்திலும் பொலிஸ் வாகனப் பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் நடைபெற்றன.

குறித்த பொலிஸ் பரிசோதனை மற்றும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள், ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .