Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.மெளலானா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிட்டுள்ளது.
இதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான புதிய பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா நியமனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
இதை ஆட்சேபித்து அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (06) வழங்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
1 hours ago