2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

அலைபேசிகள் திருட்டு; பெண் உட்பட நால்வர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளையிட்ட பெண் உட்பட 4 பேரை, நேற்று (13) கைதுசெய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து  8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 23 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த முதலாம் திகதி, காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி நிலையம் பூட்டியிருந்த நிலையில், அதை உடைத்து அங்கிருந்த சுமர் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பான ஆரம்ப பொலிஸ் விசாரணையில் அக்கரைப்பற்றச் சேர்ந்த ஒருவர் 12 கையடக்க தொலைபேசிகளுடன் கைதுசெய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, இறக்காமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் 11 கையடக்க தொலைபேசிகளுடன் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X