Editorial / 2025 மார்ச் 26 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றில் வந்து தங்கியுள்ளார். செவ்வாய்க்கிழமை (25) இரவு நித்திரைக்கு சென்றவர், அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து குறித்த சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
40 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago
55 minute ago
1 hours ago