Freelancer / 2023 மே 07 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வாழைச்சேனை, நாப்பதாவில் பகுதியில் அரிவாளால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவரே வயலுக்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு சொந்தமான ஆடுகள் நீண்ட காலமாக சந்தேகநபரின் தோட்டத்தில் உள்ள பயிர்களை அழித்து வந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை மோதலாக வலுப்பெற்றதில், கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நாப்பதாவில் பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வாழைச்சேனை குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
8 minute ago
21 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
35 minute ago